மட்டக்களப்பு சைவக் கோவில்கள் (பாகம் 1,பாகம் 2)

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
3 Min Read

தேசத்துக் கோவில்கள் என்றும் திருப்படைக் கோவில்களைன்றும் மன்னர்களால் மானியங்கள் வழங்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயங்கள் உட்பட மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள முக்கிய சைவ ஆலயங்களின் வரலாற்றினையும் வழிபாட்டு முறைகளையும் கூறும் நூல்களாகும்.

  • இவற்றில் சொல்லப்படுகின்ற
    • தான்தோன்றிச்சரம்
    • மாமாங்கேச்சரம்
      ஆகிய இரு ஈச்சசரங்கள்
    • உகந்தை மலை
    • தாந்தாமலை
    • சங்குமணிகண்டி மலை
      ஆகிய மலைக் கோவில்கள்
    • திருக்கோவில்
    • தில்லைமண்டூர்
    • கோவில்போரதீவு
    • சித்தாண்டி
    • வெருகலம்பதி
      ஆகிய திருப்படைக் கோவில்களான முருகத்தலங்கள் போன்றவை கிழக்குப் பிரதேச வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பன.


மேலும் இவ்விரு நூல்களிலும் மட்டக்களப்புப் பிரதேசத்தின் (இன்றைய மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்கள்) அறுபதுக்கும் மேற்பட்ட ஆலயங்களின் வரலாறுகள் சிறப்பாகப் பதிவாகியுள்ளதுடனர் முன்னூறு வரையான இந்து ஆலயங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

மட்டக்களப்புப் பிரதேசத்தின் மிகப் பழமைவாய்ந்த வழிபாடாக முருக வழிபாட்டினைக்குறிப்பிடும் இந் நூலாசிரியர் சோழர்,பாண்டிய மற்றும் இலங்கை மன்னர்களால் திருப்பணிகள் பெற்ற ஆலயங்கள் தொடர்Uலும் தகவல் படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பின் தேச வண்ணிமைகளாக அக்காலம் தொடர்ந்திருந்துவந்த முக்குக குலப் பிரபுக்களே திருப்படைக் கோவில்களின் பாதுகாவலர்களாக சாசனரீதியாக அதிகாரம் பெற்றிருந்தனரெனவும் வேளாளகுலத் தலைவர்களே வண்ணக்கர்களாகவிருந்து இவ்வாலயங்களின் நடைமறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்தினரெனவும் அவர் மேலும் சான்றளிப்பதையும் இங்கு முக்கியப்படுத்தவேண்டும்.

பொதுவாகக் கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியத்துள் பதிவுசெய்யத்தக்க பல தகவல்களை இந்நூல் உள்ளடக்கியிருப்பதை மறுக்கமுடியாது

மட்டக்களப்பு சைவக் கோயில்கள் 1

  • அணிந்துரை
  • ஶ்ரீமத் சுவாமி ஜீவனானந்தா
  • பணிப்பாளர் இந்துசமயத் திணைக்களம்
  • இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
  • பிரதேச அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு செ.இராசதுரை அவர்கள்
  • 1 ஆவது இயல்: நூற் பொது
    • அறிமுகம்
  • 2 ஆவது இயல் : ஈச்சரம் இரண்டு
    • மாமாங்கேச்சரம்
    • தான்தோன்றீச்சரம்
  • 3 ஆவது இயல் : மலைக்கோவில் மூன்று
    • உகந்த மலை
    • தாந்தாமலை
    • சங்கு மண் கண்டி மலை
  • 4 ஆவது இயல் : திருப்படைக் கோவில்கள்
    • திருக்கோவில்
    • தில்லை மண்டூர்த் திருத்தலம்
    • கோவில் போரதீவு சித்திரவேலாயுத சுவாமி
    • சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி
    • வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி
  • 5ஆவது இயல் : பிள்ளையார் கோயில்கள்
    • ஆனைப்பந்த்தி பிள்ளையார் கோயில்
    • களுதாவளைப் பிள்ளையார் கோயில்
    • அம்பாறை வில்லுப்பிள்ளையார் கோயில்
    • காரைதீவு பாலையடிவால விக்னேஸ்வரர் கோயில்
    • பழுகாமம் மாவேற்குடாப் பிள்ளையார் கோயில்
    • ஆரையம்பதி திருநீலகண்டப்பிள்ளையார் கோயில்
    • வாழைச்சேனை(மருங்கையடிப்பூவல்) ஶ்ரீ கைலாயப் பிள்ளையார் கோயில்
  • 6ஆவது இயல் : அம்மன் கோயில்
    • கொத்துக் குளத்து முத்துமாரியம்மன் கோயில்
    • புன்னையம்பதி (கோட்டமுனை) மகாமாரியம்மன் கோயில்
    • காரைதீவு கண்ணகியம்மன் கோயில்
    • களுவாஞ்சிக்குடி கண்ணகியம்மன் கோயில்
    • பாண்டிருப்பு திரெளபதி அம்மன் கோயில்
    • வெல்லாவெளி முத்துமாரியம்மன் கோயில்
    • கோராவெளி கோல வள்ளிநாயகி கோயில்
    • ஏறாவூர் பத்திரகாளி கோயில்
    • பெரிய போரதீவு பத்திரகாளி அம்மன் கோயில்
  • 7ஆவது இயல் : பொது
    • ஏறாவூர் வீரபத்திரன் கோயில்
    • வந்தாறுமூலை கிருஷ்ணன் கோயில்
    • பண்டாரியாவெளி நாகதம்பிரான் கோயில்
    • மட்டக்களப்பு நரசிங்க வைரவ சுவாமி கோயில்
  • 8ஆவது இயல் : மட்டக்களப்பிலுள்ள சைவக் கோவில்கள் பெயர் வரிசை

இந்த நூலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (336 MB)

மட்டக்களப்பு சைவக் கோயில்கள் 2

  • பொன்னுரை
  • சிறப்புரை – க.கணபதிப்பிள்ளை
  • அணிந்துரை – எஸ்.டி.சிவநாயகம்
  • முன்னுரை
  • பதிப்புரை
  • நூன்முகம்
    • மட்டக்களப்பு சைவக் கோவில்கள் 2
  • 1ஆவது இயல்
    • அறிமுகம் பொது
  • 2வது இயல் : பிள்ளையார் கோவில்கள் மூன்று
    • கோட்டைமுனை ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் கோவில்
    • வீரமுனைச் சிந்து யாத்திரைப் பிள்ளையார் கோவில்
    • மண்டூர் – நாகஞ்சோலை மாணிக்கப்பிள்ளையார் கோவில்
  • 3வது இயல் : சிவன் கோவில் ஒன்று
    • செட்டிபானையம் சோமநாத இலிங்கேஸ்வரர் சோமகலாநாயகி கோவில்
  • 4வது இஅயல் : முருகன் கோவில் ஆறு
    • ஈழத்து – திருச்சேந்தூர் முருகன் ஆலயம், புது கல்லடி
    • திருப்பெருந்துறை – முத்துக்குமார வேலாயுத சுவாமி கோவில்
    • குருக்கள் மடம் ஸ்ரீ செல்வக்கதிர்காமம் ஆலயம்
    • கரைதீவு மாவடிக் கந்தசுவாமி கோவில்
    • ஆரையம்பதி கந்தசுவாமி கோவில்
    • கல்லடி வேலாயுத சுவாமி கோவில்
  • 5ஆவது இயல் : அம்மன் கோவில்கள் ஐந்து
    • மண்டூர் – மண்டுக்கொட்டைமுனை துறையடி மாரியம்மன் கோவில்
    • திருப்பழுகாமம் ஸ்ரீ திரெளபதியம்மன் கோவில்
    • துறைநீலாவணை கண்ணகி அம்மன் கோவில்
    • தம்பிலுவில் கண்ணகை அம்மன் கோவில்
    • நாவலடி ஸ்ரீ கடலாட்சியம்மன் ஆலயம்
  • 6ஆவது இயல் : பொது
    • களுவாஞ்சிக்குடி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில்
    • களுவாஞ்சிக்குடி ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்

இந்த நூலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (26 MB)

Share this Article
Leave a comment