உன்னிச்சை பயணம்

மட்டுநகர் திவா
1 Min Read

கல்லடி – மட்டக்களப்பு -புதூர் – வலையிறவு – குறிஞ்சாமுனை – புதுமண்டபத்தடி – நடராஜானந்தபுரம் – இருட்டுச்சோலைமடு – ஊராண்டகுளம் – பாவற்கொடிச்சேனை – இருநூறுவில் – 8ஆம் கட்டை – உன்னிச்சை – ஆயித்தியமலை – கரவெட்டி – முள்ளமுனை – அரசடிச்சேனை – வவுணதீவு – வலையிறவு – புதூர் – மட்டக்களப்பு – கல்லடி

மட்டக்களப்பில் இருந்து உன்னிச்சைக்கு செல்ல 4 வழிகள் உள்ளன அதில் 3 பேருந்து செல்லும் வழியாகவும் உள்ளது.

1. மட்டக்களப்பு – செங்கலடி – கரடியனாறு – உன்னிச்சை
2. மட்டக்களப்பு – வவுணதீவு – ஆயித்தியமலை – உன்னிச்சை
3. மட்டக்களப்பு – பாவற்கொடிச்சேனை – உன்னிச்சை

பேருந்து செல்லாத வழியாக
1. மட்டக்களப்பு – தாந்தா மலை – இருநூறுவில் – உன்னிச்சை
என்பதுவும் காணப்படுகிறது.

எமது சைக்கிள் பயணம் மிகவும் கரடுமுரடான பாதையான பாவற்கொடிச்சேனை வழியாக தொடர்ந்தது. போய்வர அண்ணளவாக 60 கிலோமீற்றர் பயணம்.

சென்று வந்த இடங்களில் பார்த்தமட்டில் பொதுவாக அந்த ஊர் மக்கள் எரிபொருள், மருத்துவம் , உடைகள் மற்றும் ஆடம்பரத்தேவை தவிர அநேகமானவற்றை அவர்களே உற்பத்தி செய்து தன்னிறைவாக தான் வாழ்கிறார்கள்.

பயணத்தில் மொத்த செலவு 2 வேளை சாப்பாடு உட்பட ஒருவருக்கு 117 ரூபாய்.

பெற்றுக்கொண்டவை
*அனுபவம்
*உடற்பயிற்சி
*புது புது ஊர்கள் /வழிகள் அறிமுகம்
*புதிய நண்பர்கள்
*உன்னிச்சை குளியல்

மேலதிக படங்களை பார்வையிட இங்கே சொடுக்கவும்

மட்டுநகர் திவா
01/05/2022
Share this Article
Leave a comment