மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தா மலைக்கு அருகாமையில் அமைந்துள்ள குளமாகும். இது நீர் உள்ள வேளையில் பார்ப்பதை விட நீர் வற்றிய காலங்களில் சென்று பார்ப்பதும் அழகாக இருக்கும்.
நீருக்கு அடியில் இருந்த பாறைகளின் வியக்கத்தகும் அமைப்புகள் உள்ளூர் சுற்றுலாப்பயணிகளை கவருவதாக உள்ளது.
இவற்றுள் மனித தலையையும் நெஞ்சு வரையிலான உடம்பையும் கொண்ட வேற்றுகிரகவாசி போன்ற தோற்றம் கொண்ட பாறை தனிச்சிறப்பினை கொண்டது.



இவற்றை நடந்து சென்று பார்ப்பதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதால் அணைக்கட்டுக்கு வரும் பாதைக்கு அருகாக வரும் மாற்றுப்பாதையால் மோட்டார் சைக்கிள் மூலம் குளத்தின் இறுதி கட்டம் வரை சென்று பாறைகளை பார்க்கக்கூடியதாக இருக்கும்.
இந்த மாற்றுப்பாதையால் செல்லும் போது ஆமை அல்லது பாம்பின் தலையை ஒத்த வடிவமுடைய மாபெரும் பாறையையும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.



யானை நடமாட்டம் அதிகம் உள்ள இடம் என்பதால் அவதானமாகவும், ஆயத்தங்களுடனும் செல்வது பாதுகாப்பாக இருக்கும்.
குடிநீர் வசதி அங்கில்லை அனைத்தையும் காவிக்கொண்டு தான் போக வேண்டும்.
மட்டுநகர்_திவா 












