மட்டக்களப்பு இணையம் உங்களை அன்புடன் வரவேட்கிறது.

இங்கே என்ன செய்கிறோம்?

மட்டக்களப்பு கலைகள், கைத்தொழில்கள், புத்தகங்கள், கலாச்சாரங்கள், வாய்மொழி வரலாறுகள், மற்றும் சுற்றுலா தகவல்கள் போன்ற  விடையங்களை இங்கே பல்லூடகமுறையில் ஏனைய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து  தன்னார்வத்தொண்டாக  சேகரித்து பாதுகாக்கிறோம். 

ஏன் பாதுகாக்கிறோம்?

ஏடுகளில் இருக்கும் விடையங்களை வாசிக்கும் நிலைமை எதிர்கால சந்ததிகளுக்கு இருக்காது. இனி வரும் காலங்களில் இணையத்தின் வளர்ச்சி அபரீதமாக இருக்குமென்பதால் இங்கே பல்லூடக முறையில் அனைத்தையும் தொகுத்து பாதுகாக்கிறோம்.

கட்டுரைகள்

வரலாறு, கலைகள், வியப்புறு விடயங்கள், ஆராய்ச்சி 

புத்தகங்கள்

வரலாறு, பாடல்கள், அகராதி, நாடகம், சடங்குகள் 

சுற்றுலா தகவல்கள்

வரலாற்று இடங்கள், மலைகள், குளம், காடுகள், பயணக் குறிப்பு

வணக்கத்தலங்கள்

கிராமிய வழிபாடு, இயற்கை , பெருந்தெய்வ வழிபாடு

ஏட்டுச்சுவடிகள்

வைத்தியம், ஜாதகம், காவியம், கதை, மந்திரம், வரலாறு 

புத்தகங்கள்

வரலாறு, பாடல்கள், அகராதி, நாடகம், சடங்குகள் 

செவிவழிக்கதைகள்

சுயசரிதை, வரலாறு, சம்பவங்கள், உணவு பழக்கவழக்கம், கலாசாரம்

கட்டுரைகள்

வரலாறு, கலைகள், வியப்புறு விடயங்கள், ஆராய்ச்சி

சுற்றுலா தகவல்கள்

வரலாற்று இடங்கள், மலைகள், குளம், காடுகள், பயணக் குறிப்பு

வணக்கத்தலங்கள்

கிராமிய வழிபாடு, இயற்கை , பெருந்தெய்வ வழிபாடு

நமது பண்பாடுகளை நாமே பாதுகாப்போம்.

உங்களால் முடியாவிடில் நாம் ஆவணப்படுத்தி உதவ தயாராக உள்ளோம்.

அனுசரணையாளர்கள்

அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

மேலதிக கேள்விகள் இருப்பின் எம்மை  தொடர்புகொள்ளவும்.

வாட்சப் மற்றும் மின்னஞ்சல் மூலம் எம்மை அணுக முடியும்.

சில ஆவணங்கள் பொதுவெளியில் இருப்பதால் அதன் மூலம் மற்றவர்களுக்கு கிடைக்கும் நன்மையை விட தீய எண்ணத்தில் நாடுபவர்களால் ஏற்பட்ட இழப்புகள் அதிகமாக இருப்பதால் கடவுச்சொல் இட்டு பாதுகாத்துள்ளோம். என்ன காரணத்துக்காக இந்த இணைப்பை பயன்படுத்தபோகிறீர்கள் என குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்தால் அதற்கான கடவுச்சொல் விவரம் மின்னஞ்சல் மூலமாகவே பகிரப்படும்.

மக்களுக்கு தகவலை தொகுத்து ஒரே தளத்தில் கொடுப்பதும் பாதுகாப்பதும் தான் எமது நோக்கம். மாறாக எமது தளத்தினுள்ளே வாசகர்களை வைத்திருப்பது நோக்கமல்ல.

இன்று எம்மிடம் இருப்பது எது இன்னும் 50 வருடத்தின் பின்னர் இல்லாமல் போய்விடும் என நினைக்கிறோமோ அது எதுவாய் இருப்பினும் ஆவணப்படுத்த முடியும். 50 வயதுக்கு மேட்பட்ட ஆட்கள் எவரையும் நாம் ஆவணப்படுத்தி அவர்களது அனுபவங்களை சேகரித்து அடுத்த சந்ததிக்கு கடத்தலாம்.

இல்லை, நாம் எந்தவொரு சேவையும் பணத்துக்காக செய்யவில்லை. இலவசமாகவே பதிவிடலாம்.

எதிர்காலத்தில் இந்த விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் வருடாந்த இணையத்தள செலவுகளை ஈடுசெய்ய முடியும் எனும் நம்பிக்கையில் சொற்ப அளவிலான  விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன.

இல்லை, நாம் எதனையும் சேமிப்பதில்லை எனினும் எந்த நாட்டில் இருந்து பார்க்கிறீர்கள், எத்தனை தடவை வந்து சென்றீர்கள் என்பதை google analytics மூலமாக கணக்கெடுக்க அனுமதியளித்துள்ளோம்.

எப்போது ஆவணம் செய்கிறோம், எதை ஆவணம் செய்கிறோம், எந்த இடத்தில் ஆவணம் செய்கிறோம், யாரிடம் இருந்து ஆவணம் செய்கிறோம், ஆவணம் செய்தவரது முழுப்பெயர் என்ன என்பதை அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிட்டல் வேண்டும்.