மட்டக்களப்பு மான்மியம்

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
1 Min Read

மட்டக்களப்பு மான்மியம் இரு பூர்வீக சரித்திர ஏடுகளை முக்கியப்படுத்தி வித்துவானர் எவ்.எக்.சி நடராசாவால் 1962ல் தொகுக்கப்பட்டதாகும்.

அம்பிளாந்துறை பாலிப்போழ ஆசிரியர் மற்றும் செட்டிபாளையம் கணபதிப்பிள்ளைப் புலவர் ஆகிய கனவானர்களிடமிருந்து பெறப்பட்டவையே இவ்வேடுகள்.

மட்டக்களப்பு வரலாற்றுத் தேடலுக்கு கால்கோளிட்ட முதல் முயற்சியாக இதனைக் கருதமுடியும். இதனை முன்னுதாரணப் படுத்தியதாகவே பல ஆய்வுகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதைப் பார்க்கினர்றோம்.

வடக்கிலிருந்து வந்த ஒரு பெரும் தமிழறிஞர் கிழக்கிற்கு செய்த பெரும்பணியாகவே இதனை வரலாறு பதிவுசெய்யும். மட்டக்களப்பின் சரித்திர ஏடுகள் எவரால் 70 கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள் எக்காலத்தில் எழுதப்பட்டவை எனக் கண்டறிய முழயாதவை யெனினும் இது தொடர்ந்தாற்போல் பல்லோரால் பற்பல சந்தர்ப்பங்களில் எழுதிச் சேர்க்கப்பட்டவை என்பதை நூலாசிரியர் தனது முன்னுரையில் முனர்மொழிவதைப் பார்க்கலாம்.

அத்தோடு இதனை எழுதியவர்கள் அனைவரும் மட்டக்களப்புத்தேசத்தின் முன் வரலாற்றினை நண்கு அறிந்து வைத்துள்ளவர்களாகவேஇந்நுலின் மூலம் அவர் நிச்சயப்படுத்துகின்றார்.

Contents

  • இரண்டாம் பதிப்பு உரை – அ.கி.பத்மநாதன்
  • இரண்டாம் பதிப்புரிமை அனுமதி – ராஜன் நடராஜா
  • முன்னுரை – F.X.C.நடராசா
  • மட்டக்களப்பு மான்மியம் நூல் வரலாறு – F.X.C.நடராசா
  • மட்டக்களப்பு மான்மியம்
  • மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்
  • சரித்திர இயல்
  • சேனன் சரித்திரம்
  • சாதியியல்; 4ஆலயவியல் குளிக்கல் வெட்டு முறை
  • பெரிய கல்வெட்டு
  • பங்கு கூறுங் கல்வெட்டு
  • தாதன் கல்வெட்டு
  • போடி கல்வெட்டு
  • குல விருதுகள்
  • சாதித் தெய்வக் கல்வெட்டு
  • நன்மைக்கும் தீமைக்கும் கும்பவரிசை
  • பதினேழு சிறைகள் செய்யும் ஊழியம்
  • ஆசாரிகள் கல்வெட்டு
  • முற்குகர் வன்னிமை
  • ஒழிபியல்

இந்த நூலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Share this Article
Leave a comment