கரைவலை – கல்லடி கடல்

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
1 Min Read
கரைவலை

மீன் வருவதை கரையிலிருந்தே அவதானித்து அதன் நடத்தையை வைத்து என்ன மீன் எனவும் கூறும் எம் அனுபவசாலி மீனவர்கள் தான் இந்த கரைவலை மீன்பிடியின் அரசர்கள் என்றே சொல்லலாம். படித்து வைத்தியராவது மட்டுமே திறமையல்ல மேடை ஏறி பரிசு வாங்கினால் பாராட்டும் எமது சமூகம் மற்றயவர்களை பாராட்ட பின்னிப்பது கவலையான விடயமே.

தொழில் வட்டத்தில் எப்படியோ உற்பத்தியாக்கிகள் எமது விவசாயிகளும் மீனவர்களும் வகிக்கும் வகிபாகம் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது குறைவு தான்..

விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா
அடிக்கும் அலையே நம்தோழன் – ஐலசா
அருமைமேகம் நமதுகுடை – ஐலசா
பாயும் புயல் நம்ஊஞ்சல் – ஐலசா
பனிமூட்டம் உடல்போர்வை – ஐலசா
காயும் ரவிச்சுடர்கூரை – ஐலசா
கட்டுமரம் வாழும் வீடு – ஐலசா
மின்னல்வலை அரிச்சுவடி – ஐலசா
பிடிக்கும் மீன்கள் நம்பொருட்கள் – ஐலசா
மின்னல் இடிகாணும் கூத்து – ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா
முழுநிலாதான் கண்ணாடி – ஐலசா
மூச்சடக்கி நீந்தல் யோகம் – ஐலசா
தொழும் தலைவன் பெருவானம் – ஐலசா
தொண்டு தொழிலாளர் நாங்கள் – ஐலசா
ஒத்துமை கொண்டாடனும் – ஐலசா
உரிமையை உயர்த்திடனும் – ஐலசா

– மட்டுநகர் திவா

முகப்புத்தகத்தில் பார்க்க இங்கே சொடுக்கவும்

Share this Article
Leave a comment