ஆதிதமிழரின் பல அரியவகை கலைகளில் மிக தொன்மை வாய்ந்த கலையே இவ் வர்மக்கலை. உடல் வலிமையையும், உள வலிமையையும் பல மடங்கு அதிகரிக்க செய்யும் இக்கலை மருதுவத்தினையும், தற்காப்பினையும் கொண்டது.
இவ் வர்மகலையின் அதி உச்சமான நிலையே நோக்கு வர்மம் எனும் மெய் தீண்டாகலை.
பார்வையின் வழியே மற்றவர்களை தம் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரும் முறையே இவ் நோக்கு வர்மத்தின் அதி உச்சமான அபூர்வ ஆற்றல்.
எந்தஒரு பொருளையோ மனிதனையோ தொடாமல் கண் பார்வையால் மட்டுமே மற்றவர்களை இயக்கி அவர்களை தம் கட்டுபாட்டிட்குள் கொண்டுவரும் அற்புத சக்தியே நோக்குவர்மம்.
மன வலிமையின் அதி உச்சமான அமானுஷ்ய முறையே இவ் நோக்குவர்ம கலை ஆன மெய்தீண்டாகலை.
- இவ் அபூர்வ கலையின் வரலாறு தான் என்ன..!?
- இதன் நோக்கம் தான் என்ன..!?
- இது எவ்வாறு சாத்தியம்..!?
- இக்கலையில் வளர்ச்சி பாதை என்ன..!?
சற்று கூர்ந்து நோக்குவோம்…
ஆதி தமிழன் கண்டறிந்த பற்பல கலைகளில் பல விஞ்ஞானநுட்பங்கள் இருந்தாலும் அவற்றைஎல்லாம் மிஞ்சுகின்ற அதிசயிக்கதக்க அபூர்வகலையே இவ்நோக்குவர்மம்..

ஆதிதமிழராம் அகத்திய மகா முனிவரினால் அருளப்பட்ட இக்கலை ஆரம்பத்தில் நோய்களை தீர்பதற்கான யுக்தியாகவே பயன்படுத்தபட்டது. அகதிய மகா சித்தரினால் அருளப்பட்ட மருதுவ முறைகளில் அதி நுட்பமான சூக்சும முறையே இவ் நோக்குவர்மம். பார்வையின் வழியே மற்றவர்களின் மனதை தன்வசபடுதும் ஆற்றல்.
தென் இந்தியாவின் பாண்டிய நாட்டின் எல்லை பகுதியான தென் பொதிகை மலை எனும் மேற்கு தொடர்ச்சி மலையில் அகத்திய மகா சித்தர் வாழ்ந்து வந்துள்ளார், இதற்கான ஆதாரம் இன்றும் இவ் மலையில் கல்வெட்டுகளாக உள்ளன. அடர்ந்த வனமான இக் காட்டு பகுதியில் கொடிய விலங்குகளின் நடமாட்டம் இருந்தது இவ் விலங்குகளினை தன் கண் பார்வையினால் அவற்றினை நிலைகுழைய செய்து கட்டுபடுதுபதற்காகவே இவ் நோக்கு வர்மம் பயன்படுத்தபட்டது.
தவத்தின் வலிமையினால் மனதின் வலிமை பலமடங்காகும், இத் தவ வலிமையின் மூலம் மற்றவர்களின் மனதினை , சிந்தனையினை தன் கட்டுபாட்டிட்குள் கொண்டுவரும் ஆற்றல் பெருகும். இவ்வாறே நோக்கு வர்மம் செயல்படுபதாக தன் ஏட்டு சுவடிகளில் கூறியுள்ளார் மாகா முனிவர் அகத்தியர்.
நோக்குவர்ம கலையின் ஆற்றலை பெற காட்டு பகுதியே சிறந்தது எனவும் சொல்லபட்டிருக்கிறது.
மருத்துவ நன்மைக்காகவே இவ் நோக்குவர்மம் பயன்படுத்தபட வேண்டும் என்பதையும் ஏடுகளின் குறிப்பிட்டு வைத்துள்ளார் அகத்திய மகா முனிவர்.
“வர்ம பொன் ஊசி” எனும் தன் ஏட்டில் குறிப்பிட்ட இவ் நோக்கு வர்ம முறை ஆனது தேரையர் சித்தர் மூலம் போகர் சித்தர் வரை பாதுகாக்கபட்டது.
பாண்டிய நாட்டில் தோன்றிய வர்மகலை ஆனது சோழ மன்னர்களாலேயே பரப்பப்பட்டது.
ஜடா வர்மன் எனும் பாண்டிய மன்னனும், கரிகால சோழன் எனும் சோழ மன்னனும் இவ் நோக்குவர்ம கலையில் சிறந்து விளங்கியதாக குறிப்புக்கள் கூறுகின்றது.
அகதியர் அருளிய உடற் கூற்று தத்துவத்தின்படி உடலின் நரம்பு மண்டலங்களின் பிணைப்புக்களே வர்ம புள்ளிகள் ஆகவும் இவை உடலில் 108 வர்ம புள்ளிகள் காணப்படுபதாகவும் கூறப்பட்டு உள்ளது. இவ் வர்ம புள்ளிகளின் அசைவினை ஏற்படுத்துபதன் மூலம் உடலில் மாற்றங்கள் ஏற்படும்.
இதன் படி ஒருவரின் முகத்தில் 12 அதிகமான வர்ம புள்ளிகள் காணப்படுகின்றது , இவற்றின் முக்கிய புள்ளிகளை பார்வையின் வழியே இணைக்கும் போது மற்றவர்களின் ஆற்றல் கட்டுபடுத்தபடுகின்றது.
தவவலிமையாலும், சூக்சும ரகசியதினாலும், குருவின் வழிகாட்டலின் மூலமே இவ் நோக்குவர்ம கலையின் ஆற்றலை ஒருவர் பெறமுடியும் என தென் இந்தியாவில் மதுரை நகரில் உள்ள வர்மக்கலை பயிற்சி ஆசான் உடன் நான் தொலைபேசியில் பேசும் போது கூறினார். பல தகவல்களினை கூறிய அவர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் போதே பல அனுபவங்களை பெற முடியும் எனவும் கூறினார்.
இன்றும் இந்தியாவின் மதுரை, தஞ்சை, கேரளா போன்ற இடங்களில் நடைமுறையில் உள்ளன என்பதும் பெருமை கொள்ளவேண்டிய விடயம்தான்.
இக்கலையின் ஆற்றல்களை அறிந்த மேலைதேய நாடுகளான ஜப்பான், சீனா போன்றநாடுகளில் இன்றும் பேணப்பட்டு வருகின்றன.
நம் ஆதிதமிழன் கூறிய அபூர்வகலையின் பெருமையினை உலகறியச் செய்வோம்…
சுவடுகளை தேடிய பயணம் தொடரும்…
ஆய்வுகளுடன்..
நிகோஷ்....




