தமிழருக்குஎன்றுதனிபெருமைதரும்வர்மக்கலை.
பார்வையிலேயே10 பேரைகட்டுப்படுத்தும் ஆதித்தமிழரின் வர்மக்கலை.
உலகமேவியந்து பார்க்கும் அளவுக்கு தமிழரின் எத்தனை யோயுக்திகளும், அறிவியலும் இருந்தும் கூட அவை இன்று மங்கிச்செல்வது தான் நாம் சிந்திக்கவேண்டியவிடயம்.
கனத்தசட்டி கறியின் சுவை அறியாது அல்லவா அது போலவே எமது அறிவியலினை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம்.
விஞ்ஞானம் விழிதிறக்கும் முன்பே கோள்களின் அசைவினை உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் நம் மகான்கள், நம் முன்னோர்கள்.

செயற்கைசுவாசம் செலுத்தி உயிர்காக்கும் காலம் இக்காலம்..!
பிராணவாயுவினை தன்னகத்தே இருத்தி உயிர்காத்தனர் நம்முன்னோர்..
இப்படி ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிகொண்டே செல்லலாம் நம் குலத்தின் பெருமையினை.
சரி.. சரி..
வாருங்கோ..!
இனி நம்வர்மக்கலையின் அறிவியலை அறிவோம்…
பாண்டிய நாட்டின் எல்லைபகுதியில் மேற்குதொடர்ச்சிமலை எனும் அபூர்வ மூலிகைகளைக் கொண்ட மலைதொடர் உள்ளது.
இந்த மலை பகுதி முனிவர்கள் தவம் செய்யும் குகைகளும், அருவிகளும் கொண்ட இயற்கையின் இருப்பிடம்.
இயற்கையோடு இணைந்திருக்கும் நம் சித்தமகாபுருஷர்கள் தவம் செய்யும் மலை.
இந்த மலைப் பகுதியில் தான் வர்மக்கலை முதலில் தோற்றுவிக்கபட்டது.
சித்தர்களுக்கு எல்லாம் முதன்மைச்சித்தர் அகத்தியரினால் அருளப்பட்டது.

ஆரம்பகாலங்களில் காட்டுமிருகங்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கவே இந்த வர்மக்கலை பயன்படுத்தப்பட்டது.
காலமாற்றத்தின் காரணமாக இக்கலையினை மனித இனமும் பயன்படுத்த தொடங்கினர்.
இவ் வர்மக்கலையின் நன்மைகளை கண்டறிந்த பாண்டியநாட்டு மன்னன் இக்கலையினை பயின்றுவந்தான். தன் நாட்டுபடைவீரர்களுக்கும் அதனை கற்பித்தான்.
6ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பாண்டியநாட்டு மன்னன் சடையவர் மன்வர்மக்கலை போட்டியினை நடாத்தி வந்துள்ளான்.
அதன் பின்னர் சோழமன்னர்களால் இவ் வர்மக்கலை தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்துள்ளமை சோழர்காலசிற்பங்கள் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நோக்குவர்மம், மெய்தீண்டாவர்மம், வர்மஅழுத்தம், வர்மசிகிச்சை, வடக்கன்முறை, எடுத்துக்காட்டு விளையாட்டு, தற்காப்புகலை என பல்வேறுமுறைகளை கொண்டுள்ளது.

முழுக்க முழுக்க மருத்துவனத்தினை தன்னகத்தே கொண்டது இவ் வர்மக்கலை.
வடக்கன் முறை என்று சொல்லப்படும் வர்மக்கலை ஆனது பிராணவாயுவினை(O2) உடலில் அதிகரிக்க செய்யும், இதன் மூலம் உடலுக்கு தேவையான O2 அதிகரித்து சுவாசம் சீர்செய்யப்படும்.
எடுத்துக்காட்டு முறை ஆனது உடலில் வலிமையினை அதிகரிக்க செய்கின்றது.
இவற்றை எல்லாம் விட அமானுஷ்யம் கொண்ட முறைதான் நோக்குவர்மம், மெய்தீண்டாவர்மம் எனும் முறை.
100m தூரத்தில் இருப்பவர்களை கூட தனது பார்வையினால் வீழ்த்தக் கூடிய ஆற்றல் கொண்டது.
மற்றவர்களின் மனதினை தன்வசம் கட்டுப்படுத்தி அவர்களை வீழ்த்துகின்ற முறை இது.
போர்க்களத்தில் வீரர்களை கட்டுப்படுத்தல், காட்டு மிருகங்களை கட்டுப்படுதல் போன்ற நோக்கங்களுக்காக இம்முறை பயன்படுத்தபடுகின்றது.
ஒரு நபர் 10 பேரினை பார்வையினால் வீழ்த்தக்கூடிய சக்தி கொண்டமுறை இது.
பாண்டிய மன்னர்களின் போர்யுக்திகளில் இதுவும் ஒன்று.
மனதினை ஓர் நிலைபடுத்துவதன் மூலம் இந் நோக்குவர்மம் செயற்படுகின்றது.
வர்மாஅழுத்தம், வர்மசிகிச்சை முறைகள் மூலம் உடலில் உள்ள 108 புள்ளிகளில் உள்ள நரம்பு மண்டலத்தினை சீர்செய்வதன் மூலம் நரம்பு தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன.

புற்றுநோய், சிறுநீரகபிரச்சினை, ஒவ்வாமை, நரம்புத்தளர்ச்சி, மனஅழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது இவ்வர்மக்கலை.
இவ்வாறு பல்வேறு நோய்களை தீர்க்ககூடிய ஆற்றல் கொண்ட வர்மக்கலை நம் தமிழர் மத்தியில் நிலைகொள்ளசெய்வது நம் கடமையே..!
தற்காலத்தில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சீனா, போன்ற நாடுகளில் இவ் வர்மக்கலையையும் அதன் நன்மைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
“முற்றத்து மல்லிகை மனப்பதில்லை” என்பது போல நம்கலையின் பெருமையினை நாமே மறந்து விடுகின்றோம்..!
அறிந்துகொள்வோம் நம்மவரின் பெருமையினை..
பகிர்ந்துகொள்வோம்..
பலரும்பயன்பெற..!
என்றும்அன்புடன்…🖋
நிகோஷ்..


