வாரத்தின் இறுதி விடுமுறை நாட்களில் இயற்கையின் அழகை ரசிக்கவும், நம் ஊரின் மறைக்கபட்டசுவடுகளை தேடி பயணம் செய்வது எங்கள் குழுவின் வழமையான விடயம்தான்....“ எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு..! “ இருக்கும் வரை இயற்கையை ரசித்தபடி இருக்கவேண்டும் என்ற எண்ணம் நினைவுக்கு உள்ளே இருந்து மேலெழுந்து வந்தது.
இரவின் பிடி உதிர்ந்து கொண்டு இருந்தது, காலைகதிரவன் புத்தொளி எங்கும் படர்ந்திருந்த போது பகலின் முதல் நாழிகை தொடங்கியது.
மட்டகளப்பின் மேற்குதிசையில் உள்ள பழம் தமிழ் கிராமம் நோக்கி பயணம் தொடங்கியது. காலை வெயில் எம் உடலில் படர்ந்தபடி எம்மோடு வந்து கொண்டே இருந்தது. இயற்கையில் கிடைக்கும் விற்றமின்D இனை உடல் உள்வாங்கி கொண்டே பயணம் தொடர்ந்தது.

செல்லும் வழியோ ஒற்றையடி பாதை இருபக்கமும் பச்சைப்பசேல் என்ற வயல்வெளி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்து இருந்தது. வாய்கால் வழியே சலசலத்து ஓடும் நீரின் சத்தமும் வயல்வெளியில் இருந்து வீசும் தூய்மையான காற்றையும் சுவாசித்தபடி கிராமத்தை அடைந்தோம்.

காட்டு பயணத்துக்கு வழிகாட்டும் வடிவேல் ஐயாவின் வீட்டை வந்தடைந்தோம்.
சுற்றிவர வயல்வெளியின் மத்தியில் தென்னை மரங்களின் நிழலில் கீழ் இருந்தது அவரின் வீடு.

வீட்டின்முன் நின்று கொண்டு இருந்தது பெரும் வேப்பைமரம். வீட்டின் முற்றதுக்கு மஞ்சள்நீர் தெளித்து கொண்டு இருந்தார் அன்னம்மா. (வடிவேல் ஐயாவின் மனைவி.)
வணக்கம் அம்மா… வடிவேல் ஐயா இருக்கிறாரா..!?
வாமனே..! Town ல இருந்தாவாரிங்க..
என்று கேட்டபடியே வீட்டின் உள்ளே சென்ரார் அன்னம்மா…
பனை ஓலை பாயினை கொண்டு வந்து வேப்பமரநிழலில் விரித்தபடி சொன்னார்…
மாட்டில பால் கறக்கார் இருமனே வரட்டும்….
சரி அம்மா..
என்று சொன்ன படியே தரையில் உட்கார்ந்து கொண்டோம்..

வீட்டினுள் சென்ற அன்னம்மா செம்பு பாதிரத்தில் நீர் கொண்டுவந்து தந்தார்..
அதனை அருந்தும் போது நினைவுக்கு எட்டியது செம்பு கிருமிநீக்கம் செய்யும் சுத்தமான நீராக மாறும்…
பேசியபடியே இருக்க வீட்டின் பின்புறம் இருந்து வந்தார் வடிவேல் ஐயா..
வேப்பம் குச்சியில் பல்துலக்கியபடி பசும்பால் குடதுடன் வந்தார் வடிவேல் ஐயா..
வாங்க மக்காள்… எப்படி சுகநலம்..!?
என்று கேட்டபடியே பால்குடதினை அன்னம்மா கொடுத்துவிட்டு, வேப்பம்குச்சியில் பல்துலக்கியபடியே வீட்டின் கிணற்றடிக்கு சென்றார்…
வேப்பமரநிழலில் நின்றபடியே சிந்தனைக்கு எட்டியது….
வேப்பம்குச்சியில் பல்துலக்குவது பற்களுக்கு வலுசேர்க்கும், வேப்பமரகாற்று வீட்டின் உள்ளே நுழையும் போது கிருமிகளை இல்லாது செய்யும்…
வேப்பம்காற்றினை சுவாசித்து கொண்டு இருக்கையில் காலை நேர உணவினை கொண்டு வந்தார்அன்னம்மா…
ஊறவைத்த பழம் சோறும்,தயிரும் கலந்து காலை உணவுடன் மூங்கில் குடுவையில் பாசும் பாலும் தந்தார் அன்னம்மா..


அடடே…!
என்ன ஒரு அற்புதமான உணவு…
உணவின் சுவை உச்சம் தலை வரை சுவையேறியது…
குடலும், வயிறும் குளிர்மை கொண்டது..
வெறும் வயிற்றில் உண்ணும் குளிர்மையான உணவு நாள் முழுவதும் உடலை புத்துணர்வு கொள்ள செய்யும்..
தரையில் அமர்ந்த படி உணவு அருந்தினால் உணவுசமிபாடு அடைதல் இலகுவாகும்..
நெற்றியில் அணிந்த திறுநீற்றுடன், ஒரு கப் மூங்கில் குடுவையில் பசும்பாலை குடித்தபடியே வந்த வடிவேல் ஐயா..
வாருன்கோ போவம் என்று மலையை நோக்கி தொடர்தது பயணம்..
செல்லும் வழி எங்கும் தூய்மையான காற்றினை சுவாசித்தபடி மலை அடிவாரத்தினை அடைந்தோம்.
ஆய்வுகள் முடிந்ததருவாயில் வந்து கொண்டிருந்தோம்.
வரும் வழியில் மதுர மரநிழலின் கீழ் வாய்க்காலில் நீர் ஓடிக்கொண்டே இருந்தது.
சுற்றிவர வயல் வெளிமத்தியில் உள்ள நீரோடை அது..
வாருங்கோ ஒரு குளியல் போடுவம் என்றபடி மதுரமரவேர்கள் தொட்டுசெல்கின்ற நீரோடையில் ஓர் குளியல்..
தணிந்தது உடலின் சூடு..

மறுபடியும் வடிவேல் ஐயாவின் வீட்டை வந்தடைந்தோம்.
மதிய உணவு தயார் நிலையில் இருந்தது..
உண்வினை பறிமாற தொடங்கினார் அன்னம்மா..
பனை ஓலை பாயில் தரையில் அமர்ந்து கொண்டோம்..
வாழை இலையினை பரிமாறினார்…
நேற்று எடுத்த புதிர் நெல் சோறு மனே..! நல்லா இருக்கும் நல்லா சாப்பிடுங்கோ…
வீட்டில் விழைந்த கீரை, தோட்டதில் பறித்த கத்தரி, தூதூவளை இலை சம்பல், பொன்னாங்காணியும், மரவெள்ளியும் கலந்த ஓர் ஆணம், முன்வாசலில் நிண்ற வாழை பூசுண்டல், நாட்டு கோழி குளம்பும்…
மூங்கில் குடுவையில் ஒரு கப் தயிர்..
அப்பாடா…
பார்க்கவே நாவில் சுவை ஏறியது..
எங்களை அறியாமலே உணவை அருந்தி கொண்டோம்.
வீட்டு தோட்டதில் விழைந்த மரக்கறியின் சுவை தனிசுவைதான்..
உடலுக்கும், குடலுக்கும் சிறந்த உணவு அருந்தியபின் வெற்றிலை கூறினைதந்தார் வடிவேல் ஐயா…
சாப்பிடுங்க மக்காள்..!
இத சாப்பிட்டா உண்ட உணவு லேசாசமிக்கும் என்று சொன்ன படியே வெற்றிலைகூரிணை மெல்ல தொடங்கினார்..

நாங்களும் மென்று கொண்டோம் வெற்றிலை கூரிணை..
சில நாழிகை ஓய்வுக்கு பின்னர் வடிவேல் ஐயாவுக்கும், அன்னம்மாவுக்கும் நன்றி சொன்ன படி வீடு நோக்கி நகர்ந்தோம்…
“ அமைதியும், மருத்துவமும்,நல்ல உணவும் இன்றும் நம் கிராமங்களில் இருக்க தான் செய்கின்றது….”
“உணவே மருந்து”
என்றும்அன்புடன்…![]()
நிகோஷ்.

