சடங்கு வெளிப்படுத்தும் குறியீட்டுத் தன்மை
தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய சடங்கு முறை வெளிப்படுத்தும் குறியீட்டுத் தன்மைகளாக பின்வருவன காணப்படுகின்றன.
அந்தவகையில் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல் சடங்கு முறையானது ஆலய கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும்.
அதாவது ஆலய கதவு திறந்த முதல் நாள் தொடக்கம் இருந்து இறுதிநாள் வரை மக்கள் தங்களது நேர்த்திக் கடன்களைநிறைவேற்றி வருவர் அந்தவகையில் மடிப்பிச்சை எடுத்தல், நெல் கொடுத்தல், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை நேத்திகொடுத்தல், தீச்சட்டி எடுத்தல், காவடி ஆட்டம், அடையாளம் கொடுத்தல் போனற் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.
அடையாளகொடுத்தல் எனும் நிகழ்வானது மிகவும் முக்கியம் பெறுகிறது. அதாவது ஆலயத்தில் நிர்வாக குழுவினரால் அடையாள பொருட்கள் விற்கப்படும்.
பக்தர்கள் தங்களுக்குரிய நோய் கழித்தால் அம்மனுக்கு அதனுடன் சம்பந்தப்பட்ட அடையாள பொருட்களை வாங்கி கொடுத்து தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.
குறிப்பிட்ட நேர்த்திக்கடனுக்குரிய பொருட்கள் தங்கம், வெள்ளி போனற் வற்றில் காணப்படும்.
அடையாள பொருட்கள் ஆலய முன்மண்டபத்தில் பாக்கு, வெற்றிலை, பழம் என்பவற்றுடன் வழங்கப்படும்.
அதற்குரிய பணத்தை செலுத்தி அதனை ஒரு தட்டில் வைத்து வெள்ளைத் துணியால் மூடி கோயிலைவலம் வந்து தலையை மூன்று முறை சுற்றி கொடுப்பார்கள். அதனை வாங்கிய பின்னர் தீர்த்தம் தெளித்து விபூதி பிரசாதம் கொடுக்கப்படும்.
மடிப்பிச்சை எடுத்தல் சடங்கு முறையானது பெரும் நம்பிக்கையை பெற்ற ஒன்றாக காணப்படுகிறது.
அம்மனுக்கு தொண்டு செய்வதற்காகவும் நேர்த்திக் கடனுக்காக பெண்கள் இதனை செய்து வருகின்றனர்.
முதலில் நீராடி சேலையை மடித்து உடுத்துவார்கள். பினன்ர் வேப்பிலையை எடுத்துக் கொண்டு தங்களுடைய வீட்டில் இருந்து சிறிது நெல்லை எடுத்தபினன் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து பின்பு ஆலயத்தில் கொண்டுவந்து நேர்த்தியை நிறைவேற்றுவார்கள்.
அடுத்ததாக பிள்ளை இல்லாதவர்கள் தங்களது குறையைப் போக்கிக் கொள்வதற்காக குழந்தைகளை விற்று வாங்குவதாக நினைப்பார்கள்.
அதாவது பிள்ளை பிறந்த பின்னர் தங்களது குழந்தைகளை ஆலய நிர்வாகிகளிடம் கொடுத்து விலை கூறச்செய்து அதற்கான பணத்தைசெலுத்திய பின்னர் குழந்தைகளை மீண்டும் பெற்றுக்கொள்ளவர்.
இச்சடங்கு முறையானது மக்களின் பெரும் நம்பிக்கையைபெற்ற ஒன்றாகவே காணப்படுகிறது.
அத்துடன் தொழில் சம்பந்தமான விடயங்களுக்கும் நோயைத்தீர்ப்பதற்காகவும் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் நேர்த்திக்கடன் வைத்து அது நிறைவேறியதும் கடவுளுக்கு நேர்த்தி செய்பவர்களாக இருகக்கின்றனர்.
காவடியாட்டம் என்பது மிகவும் பயபக்தியுடன் மேற்கொள்ளப்படும் ஒரு நேர்த்தி முறையாகும்.
அதாவது ஊரின் எல்லையில் காணப்படும் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து உரு ஏற்றி பின்பு வீதி வழியாக காவடியாடி ஆலயத்தை வந்தடைந்தடையும்.
ஆலயத்தை வலம் வந்து பின் கப்புகனாரினால் நீர்தெளித்து அவர்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.
சடங்கு முறைகள் இவ்வூர் மக்களிடையே பெரும் நம்பிக்கையையும் பக்தி உணர்வையும் ஏற்படுத்தும் ஒன்றாக விளங்குகின்றது.
தொடரும்…..
முன்னைய பதிவாகிய தம்பிலுவில் கண்ணகி அம்மன் வழிபாட்டு பாரம்பரியமும் அதன் சடங்குமுறைகளும் – பகுதி 6 என்பதனை பார்வையிட இங்கே சொடுக்கவும்.



