ஓர் இந்துவானவன் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்த பின் செய்ய வேண்டியவை.
- உடலை விட்டு முன்னறையில் ஒரு உயர்ந்த பீடத்தில் தலையானது தெற்கு புறமாக இருக்கும் படி கிடத்த வேண்டும்.
- தலைப் பக்கம் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
- கால் பெரு விரல் இரண்டையும் சேர்த்து வெள்ளைத் துணியால் கட்டி விட வேண்டும்.
- தலை மட்டும் தெரியும் படி தூய வெள்ளைத் துணியால் உடலைப் போர்த்தி விட வேண்டும்.
- இரு கைகளும் சேர்ந்த படி கட்டி விட வேண்டும். கைகள் நெஞ்சின் மீது படும் படியாக வைக்க வேண்டும்.
- கண்ணிமைகள் தூங்குவது போல் மூடியிருந்தால் அப்படியே விட்டு விடலாம்.
- திறந்த படி இருந்தால் சந்தனம், மஞ்சள் இவற்றில் ஏதாவது ஒன்றைக் குழைத்து கண்ணின் மேல் பூசி விட வேண்டும்.
- வாய் திறந்த படியே இருக்குமானால் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் இடித்து வைத்துக் துணியால் கட்டி விட வேண்டும்.
- நெற்றியில் திரநீற்றை மூன்று கோடுகள் விழும் படியாகவோ, பரந்த அளவிலோ பூசி சந்தனப் பொட்டு வைக்க வேண்டும்.
- தலைப் பக்கம் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வைத்து, எரியும் இடத்தில் தேங்காய் உடைத்து வைத்து வெற்றிலையும் பாக்கும் வைக்க வேண்டும்.
- நறு மணத்திற்காக ஊதுபத்தி கொழுத்தி வைக்க வேண்டும். சாம்பிராணி புகை இட வேண்டும்.
- மூக்குத் துவாரத்திலிருந்து நீர் வடியுமானால் பஞ்சினால் துவாரங்களை அடைத்து விட வேண்டும்.
- கிடத்தி வைக்ககப்பட்டுள்ள அறையிலிருந்து நாற்காலி, மேசைகளைகளை அப்புறப் படுத்தி துக்கம் காண வருபவர்கள், அங்கே அமர்ந்து இருக்கவும் ஏற்ற வசதி செய்து வைக்க வேண்டும்.
- அந்த அறையில் மாட்டப்பட்டுள்ள படங்களை எடுத்து விடவேண்டும் அல்லது திருப்பி வைக்க வேண்டும்.
நீர்க் குடம் கொணர்தல்
- நீர்க் கொண்டு வரச் செல்பவர்கள் குளித்து ஈர வேட்டியுடன் குடத்தில் நீர் நிரப்பி இடத்தோளியில் வைத்துக் கொண்டு வர வேண்டும்.
- நீர்க் கொண்டு வரப் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செல்வார்கள், பிள்ளைகளுக்கு பெற்றோர் செல்வார்கள்.
- பூணூல் அணிவது வழக்கமாக இருக்கிறது.
- நீர்க் குடம் கொண்டு வரும் போது மேல் கட்டி வெள்ளைத் துணியை இருவர் பிடித்து வருவது வழக்கம்.
- ஆண்கள் குடத்து நீருடன் வரும் சமயம் உறவு முறை உள்ள பெண்கள் அவர்களுக்கு முன்னால் இழவுச் சீருடன் செல்வார்கள்.
- குடத்தில் கொண்டு வரப்பட்ட நீர் உடலைக் குளிப்பாட்டும் இடத்தில் வைக்கப்படும்.
தொடரும்…
- ஜீவசங்கரிகட்டுரை தொடற்சியை வருகின்ற நாட்களிலும் எதிர்பார்க்கலாம். திருத்தங்கள் பின்னூட்டங்கள் இருப்பின் தெரிவிக்கத் தயங்க வேண்டாம்.
ஏனெனில் மரபு வழி மரணகிரியை முறைகள் நாளுக்கு நாள் எமது பகுதியில் அழிந்து கொண்டு வருவதை அனைவரும் உணர்ந்திருப்பீர்களென நம்புகிறேன். தொடர்புகளுக்கு mattuweb@gmail.com எனும் மின்னஞ்சலை பயன்படுத்தவும்.
-மட்டுநகர்_ திவா
- மரபுவழி மரணகிரியைகள் பதிவுகளின் தொகுப்பு
-மட்டக்களப்பு இணையம்


