மரபுவழி மரணகிரியைகள்:6

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
3 Min Read
mutkuka kulaththarin marana sadankukal mattakkalappu.com part 6

அபிஷேகம் முடிந்த பின்

  • அபிஷேகத்திற்கு பிறகு உடலை நன்றாக துவட்ட வேண்டும்.
  • உயிருள்ள மனிதன் அலங்கரித்தல் போல இருக்க வேண்டும்.
  • ஆணாக இருந்தால் வேட்டி சட்டை அணிவிக்க வேண்டும்.
  • நெற்றியில் திருநீறு இட்டுச் சந்தனம், குங்குமம் இடவேண்டும் கழுத்தில் மாலை இடவேண்டும்.
  • முன்பு போலவே கை பெரு விரல்களையும் கால்களையும் பெரு விரல்களையும் வெள்ளைத் துணியினால் கட்ட வேண்டும். வாயையும் கட்ட வேண்டும்.
  • பிறகு சவப்பெட்டியில் உடலை கிடைத்த வேண்டும். பெட்டிக்குள் இடும் போது தலை உயரமாக இருக்கு அடியில் சிறு தலையணை இடவேண்டும்.
  • உடலின் மேல் பன்னீர் தெளிக்க வேண்டும் உதிரிப் பூக்களைப் பெட்டிக்குள் இட வேண்டும்.
  • அனைத்தும் செய்த பிறகு பெட்டியை விட்டு வாசலில் அனைவரும் இறுதியாக பார்த்ததற்காக கால் பாகம் தெருவை நோக்கி இருக்கும் படி வைக்க வேண்டும். (தலை தெற்கு பக்கம் இருக்க வேண்டும்.)
  • பெண்கள் வாய்க்கரிசி இடுதல் அரிசியை ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரிசியில் மஞ்சளை கலக்க கூடாது. மங்கள நிகழ்வுக்கு தான் மஞ்சள்.
  • உடலின் மார்பில் ஒரு வெள்ளைத் துணி விரிக்கப்பட வேண்டும்.
  • வாய்க்கரிசி உள்ள தட்டைப் பெட்டியின் தலைப்பக்கம் வைக்க வேண்டும்.
  • வாய்க்கரிசி இடும் உறவுப் பெண்கள் பெட்டிக்கு இடப்புறமாக வந்து, அரிசியை வலக்கையால் கொஞ்சம் எடுத்து, காசுடன் சேர்த்து, தலையில் இருந்து கால் வரை கொண்டு சென்று மார்பில் இட வேண்டும் இம் முறையே வழக்கில் உள்ளது.
  • ஆனால் அரிசியை வாயில் விடுவதே பொருத்தமாகும். பெண்கள் அனைவரும் வாய்க்கரிசி இட்ட பிறகு அங்கு மௌனம் நிலவ வேண்டும்.

தாலி வாங்குதல்

  • கணவன் இறந்து விட்டால் மனைவியின் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யத்தை வாங்கி விடுவதற்கு தாலி வாங்குதல் என்று பெயர் அவ்வாறு தாலி வாங்குதலில் இரண்டு முறைகள் உள்ளன
  1. உடன் தாலி வாங்குதல்
  2. பதினாறாம் நாள் தாலி வாங்குதல்
  • இறந்தவரை குளிப்பாட்டி அலங்கரித்து பின் மனைவியை தலையோடு தண்ணீர் ஊற்றிக் கொள்ள செய்ய வேண்டும் பின் கணவருடைய தலைப்பக்கம் இடப்புறமாக நாற்காலியில் உட்கார செய்ய வேண்டும்.
  • கணவர் உடலின் கழுத்திலும் மனைவி கழுத்திலும் மாலை இட வேண்டும்.
  • முதலில் மனைவி தன் கழுத்து மாலையை கணவன் கழுத்தி இட வேண்டும்.
  • பின் திருமணத்தில் மாலை மாற்றுவது போல ஒருவர் உதவியுடன் இருவருடைய மாலையும் மும் முறை மாற்ற வேண்டும்.
  • சுமங்கலி உறவுப் பெண் ஒரு தட்டில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வைத்து, பூக்களுடனும் பால் கிண்ணத்துடனும் அருகில் வந்து நிற்க வேண்டும்.
  • மாலை மாற்றி முடிந்ததும் மனைவியானவள் கணவரின் இடப்புறம் நின்றபடியே தாலியை கழற்றி பால் கிண்ணத்தில் இட வேண்டும் பின் அத்தாலி வீட்டுக்குள் கொண்டு செல்லப்படும்.
  • மனைவி தாலியைக் கழற்றும் போது அளவு கடந்த துக்கத்தால் கணவர் மீது விழுந்த புலம்புவது இயல்பு அருகில் உள்ளவர்கள் அவளை ஆறுதல் படுத்த வேண்டும்.
  • பதினாறாம் நாள் துக்கத்தன்று தாலி வாங்கும் வழக்கமும் உண்டு அன்று இம்மாதிரியே செய்தனர்.

தொடரும்…

ஜீவசங்கரி

கட்டுரை தொடற்சியை வருகின்ற நாட்களிலும் எதிர்பார்க்கலாம். திருத்தங்கள் பின்னூட்டங்கள் இருப்பின் தெரிவிக்கத் தயங்க வேண்டாம்.
ஏனெனில் மரபு வழி மரணகிரியை முறைகள் நாளுக்கு நாள் எமது பகுதியில் அழிந்து கொண்டு வருவதை அனைவரும் உணர்ந்திருப்பீர்களென நம்புகிறேன். தொடர்புகளுக்கு mattuweb@gmail.com எனும் மின்னஞ்சலை பயன்படுத்தவும்.
அல்லது mattakalappu.com எனும் முகப்புத்தகத்தில் தொடரவும்.
-மட்டுநகர்_ திவா

-மட்டக்களப்பு இணையம்

Share this Article
6 Comments