மரபுவழி மரணகிரியைகள்:5

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
2 Min Read
mutkuka kulaththarin marana sadankukal mattakkalappu.com part 5

இறந்த உடலை குளிப்பாட்டுவதற்கு

தகுந்த நீளமும் அகலமும் உள்ள படுக்கை போன்ற நாற்காலியை தயார் செய்து தலையை தெற்கு புறமாக வைக்க வேண்டும்.

தலைப் பக்கம் ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெயையும் ஒரு தட்டில் சீயக்காய் தூளையும் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.

பெண் உடலாயிருந்தால் மஞ்சள் தூளையும் வைக்க வேண்டும்.

குருக்கள் கிரியை செய்து முடித்துத் தந்த தீர்த்தத்தையும் வைக்க வேண்டும். அதை உடலின் மீது தெளிக்க வேண்டும்.

எலுமிச்சங்காய்களை துண்டு துண்டுகளாக நறுக்கி அவற்றை ஒரு தட்டில் வைக்க வேண்டும். பெரிய வாளிகளிலோ தொட்டிகளிலோ நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

உடல் ஆணாக இருந்தால் அனுபவமுள்ள ஆண்கள் குளிப்பாட்ட வேண்டும்.

உடல் பெண்ணாக இருந்தால் அனுபவமுள்ள பெண்கள் குளிப்பாட்ட வேண்டும்.

mutkuka kulaththarin marana sadankukal mattakkalappu.com part 5
எமது பாரம்பரியங்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

எண்ணை அரப்பும் வைக்க வருபவர்கள் உடலில் எண்ணையும் அரப்பும் இடுவதற்கு முன் அதனை கவனமாக கொண்டு வந்து உடலை குளிப்பதற்கு வசதியாக கால் பக்கம் தாழ்வாகவும், தலைப்பக்கம் உயரமாகவும் இருக்கும் படியாக கிடத்த வேண்டும்.

உடலில் கட்டியுள்ள கால் கட்டு, கை கட்டு போன்ற கட்டுகளை அவிழ்த்து விட வேண்டும்.

கொள்ளி இடுபவர் யாரோ, அவர் கடைசியில் எண்ணையும் அரப்பும் இட வேண்டும்.

உறவுக்காரர்கள் ஒவ்வொருவரும் இறந்த உடலுக்கு இடப்புறமாக நின்று எண்ணையும் அரப்பும் இட்ட பின் பிள்ளைகள் இட வேண்டும். (பெற்றோராக இருந்தால்) எண்ணெக் கிண்ணத்தில் உள்ள எண்ணெயை இடக்கை மூன்று விரல்களால் தொட்டு புறவிரல்களால் மும் முறை தலை உச்சியில் கீழிருந்து மேல் நோக்கித் தடவியது போன்று அரப்பையும் அப்படியே தடவ வேண்டும்.

தடவிய பிறகு கையை பக்கத்திலுள்ள நீரில் நனைத்து துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும்.

பிறர் மீது படக்கூடாது என்பதற்காக கைகளை உதர கூடாது.

பெண்ணாக இருக்கும் ஆனால் அரப்புடன் மஞ்சள் பொடியை பயன்படுத்த வேண்டும்.

இறுதியாகச் சடங்கு செய்பவர் தம்முடைய இரு கை விரல்களையும் விரித்து இடக்கை மேலும் வலக்கை கீழுமாக வைத்து பாதத்திலிருந்து தலை வரை மெதுவாக கொண்டு செல்ல எலுமிச்சை, ஆரஞ்சு, தயிர், பால், இளநீர், கருப்பஞ்சாறு இவை கலந்த தனித் தனி தண்ணீரை உடலில் மேல் ஊற்ற வேண்டும்.

இறுதியாக தண்ணீர் ஊற்றி முடிக்க வேண்டும்.

தொடரும்…

ஜீவசங்கரி

கட்டுரை தொடற்சியை வருகின்ற நாட்களிலும் எதிர்பார்க்கலாம். திருத்தங்கள் பின்னூட்டங்கள் இருப்பின் தெரிவிக்கத் தயங்க வேண்டாம்.
ஏனெனில் மரபு வழி மரணகிரியை முறைகள் நாளுக்கு நாள் எமது பகுதியில் அழிந்து கொண்டு வருவதை அனைவரும் உணர்ந்திருப்பீர்களென நம்புகிறேன். தொடர்புகளுக்கு mattuweb@gmail.com எனும் மின்னஞ்சலை பயன்படுத்தவும்.
அல்லது mattakalappu.com எனும் முகப்புத்தகத்தில் தொடரவும்.
-மட்டுநகர்_ திவா

-மட்டக்களப்பு இணையம்

Share this Article
8 Comments