மரபுவழி மரணகிரியைகள்:10

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
3 Min Read
mutkuka kulaththarin marana sadankukal mattakkalappu.com part 10

எண்ணை நீராடுதல் (சம்பந்திமார் விருந்து)

  • பதினாறு அல்லது முப்பத்தொரு நாளும் துக்கம் கடைப்பிடித்து வந்தவர்களுக்கு துக்கத்திலிருந்து விடுதலை அளிக்கும் நாளாகவே பதினேழாவது அல்லது முப்பத்தெறாவது நாளை முன்னோர்கள் தேர்ந்தெடுத்தனர்.
  • அந்த நிகழ்ச்சிகளை செய்யும் பொறுப்பையும் மாமன், மைத்துனர்களின் கடமையாகக் கொண்டனர். எனவே இவ்விருதை சம்பத்திமார் விருந்து என்றும் கூறுவர்.
  • 16ம் நாள் வரைக்கும் துக்கம் கடைப்பிடித்து வழக்கமான வாழ்க்கைக்கு செல்லும் ஒரு நிகழ்ச்சியாகவே 17ஆவது அல்லது 31வது நாளின் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. அன்று காலையிலிருந்து நண்பகளுக்குள் இது நடைபெற வேண்டும்.
  • கொள்ளி இட்டவர்களுக்கு மைத்துனர்கள், முறை உள்ளவர்கள் எண்ணை அரப்பு புதுவேட்டி, துண்டு முதலியன வாங்கி வர வேண்டும் கொள்ளியிட்டவரும் வெறும் உடன் பிறந்தவர்களும் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்.
  • குளித்து முடித்தவுடன் முறை உள்ளவர்கள் புதுவேட்டி தந்து அணிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
  • பிறகு படையலிட்டு உறவுமுறையுள்ளோர் தூபதீபம் காட்டி திருநீறு அணிய வேண்டும்.
  • அதன் பிறகு அனைவரும் உணவு பரிமாற வேண்டும்.
  • இந்த எண்ணெய் நீராடல் நிகழ்ச்சியின் போது, சம்பந்தி மாறாகவும் மைத்துனர்மாராக உள்ளவர்களுமே உணவுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம்.
  • அம் மாதிரி உறவு உள்ளவா்களே, கொள்ளி வைத்தவர் குளித்து வந்தவுடன் வேட்டியும் துண்டும் தருவதுடன் உட்காரவைத்து தலையில் தலைப்பாகையும் கட்டுவர்.

அபரக்கிரியை என்றால் என்ன?

  • ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆன்மா நலம் பெறுற் பொருட்டு அவருடைய பிள்ளைகள் முதலானோர் செய்யும் கிரியையே அபரக் கிரியை ஆகும்.
  • அபரம் என்றால் பிந்தியது என்று பொருள் பிள்ளைகள் செய்யும் இக் கிரியை இறந்தவரை ஈடு ஏற்கின்றது.
  • புத் என்னும் நகரத்தில் தந்தை விழாத படி கரையேற்றுவதனாலேயே பிள்ளைகளுக்கு“புத்ரன்” – புத்திரன் என்ற பெயர் வந்தது.

இதனாலேயே திருவள்ளுவர்,

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

(குறள்) எனக் கூறியுள்ளார்.
  • இறந்தவர்களுக்குப் பிள்ளைகள் செய்யும் கிரிகைகள் அவர்களுக்குத் சாந்தி அளிக்கின்றன.
  • ஆதலால் தாய் தந்தையருக்கு அவர்கள் இறந்த பிறகு செய்ய வேண்டிய கடமைகளை பிள்ளைகள் முரண்பாடின்றி செய்தல் வேண்டும். அதுவே அபரக் கிரியையாகும்.
  • அந்த அபரக்கிரியை அந்தியேட்டி, அஸ்தி சஞ்சயனம், பாஷாண பூஜை, சிரார்த்தம் என நான்கு வகைப்படும்.

அந்தியேட்டி

  • அந்திய+ இட்டி = அந்தியேட்டி, மனித வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் செய்யப்படும் யாகம் ஆன்ம சுத்திகாகச் செய்யப்படும்.
  • சமயம் அனுஷ்டானங்களில் உண்டான குறைகள் அனைத்தும் இதனால் நீங்கும்.

அஸ்தி சஞ்சயனம்

  • அஸ்தியும் சஞ்சயனம் என்பதற்கு எலும்பைச் சேகரித்தல் என்பது பொருள்.
  • உடலை எரித்த பின் எலும்புகளையும் சாம்பல் களையும் எடுத்து புண்ணிய நீரில் இதில் கரைத்து விடுவது.

பாஷாண பூஜை

  • உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை ஒரு கல்லில் ஆவாஹித்துப் பூசிப்பது. புண்ணியத்திற்காக தானம், திருப்திக்காக தர்ப்பணம் செய்வது.

சிரார்த்தம்

  • சிரத்தையுடன் செய்யப்படுவதே சிரார்த்தம் ஆகும்.
  • பித்ருக்கள் இறந்த நாளில் அவர்களின் மேல்க்கதிக்காக பிள்ளைகள் சிரத்தையுடன் செய்யும் கிரியை சிரார்த்தம் எனப் பொருள்படும்.
  • மனித வாழ்வு பிறந்தது முதல் இறப்பு வரையில் தான் என பலர் கருதுகின்றனர். ஆனால் நமது இந்து தர்மம் மனிதன் பிறப்பிற்கு முன்பும் பிறந்து வாழும்பொதும், இறந்த பின்பும், அவ் வாழ்வு உண்டு என வலியுறுத்தி அதற்குரிய கிரியைகளை வகுத்துள்ளது.
  • அக் கிரியைகளை தவறாது ஒவ்வொரு இந்துவும் கைக்கொண்டு ஒழுகித் தாங்களும் தங்கள் முன்னோர்களையும் கடைத்தேற்ற வேண்டும் இது அவசியமானதொன்றாகும்.


தொடரும்…

ஜீவசங்கரி

கட்டுரை தொடற்சியை வருகின்ற நாட்களிலும் எதிர்பார்க்கலாம். திருத்தங்கள் பின்னூட்டங்கள் இருப்பின் தெரிவிக்கத் தயங்க வேண்டாம்.
ஏனெனில் மரபு வழி மரணகிரியை முறைகள் நாளுக்கு நாள் எமது பகுதியில் அழிந்து கொண்டு வருவதை அனைவரும் உணர்ந்திருப்பீர்களென நம்புகிறேன். தொடர்புகளுக்கு mattuweb@gmail.com எனும் மின்னஞ்சலை பயன்படுத்தவும்.
அல்லது mattakalappu.com எனும் முகப்புத்தகத்தில் தொடரவும்.
-மட்டுநகர்_ திவா

-மட்டக்களப்பு இணையம்

Share this Article
4 Comments