மரபுவழி மரணகிரியைகள்:8

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
3 Min Read
mutkuka kulaththarin marana sadankukal mattakkalappu.com part 8

3ம் நாள் சடங்கு (பால் ஊற்றுதல்)

  • உடலை எரித்து இருந்தால் (மின் சுடலையில் எரித்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களிடம் சாம்பலை பெற்றுக்கொள்ளலாம்) எரித்த இடத்தில் எலும்புகள் கிடைக்கும்.
  • இடுகாடாக அல்லது எரித்த இடமாக இருப்பின் முதலில் பால் அல்லது நீர் ஊற்றி அனலைத் தணித்து தலை எலும்புகளை குடத்துக்குள் கொள்ளி வைத்தவர் எடுத்து வைக்க வேண்டும்.
  • உடல் எலும்புகளை மற்றோர் குடத்திற்குள் வைக்க வேண்டும்.
  • இரு குடங்களையும் தலைப்பக்கம் வைக்க வேண்டும். சாம்பலை எல்லாம் ஒன்று சேர்த்து கால் பக்கம் வைக்க வேண்டும்.
  • கால் பக்கம் இலை போட்டு பழம், பாக்கு, வெற்றிலை முதலியன வைத்து தேங்காய் உடைத்து தூபதீபம் காட்டி வணங்க வேண்டும்.
  • பிறகு எரித்த இடத்தில் உழும் பாவனையாக உழுது, அதில் நவதானியங்களை தூவி பால் தெளித்தல் வேண்டும்.
  • தலை எலும்புகளை வைத்து குடத்தின் வாயில் மஞ்சள் துணி கட்டி அதை எடுத்துச் சென்று ஆற்றில் அல்லது கடலில் விட வேண்டும்.
  • கால், கைகளில் படாமல் அஸ்தியை நீரில் கரைப்பதானது, ஆத்மாவை குளிர வைக்கம் அறச் செயலாகும்.
  • உடலை எரித்த நாளிலிருந்து தினமும் வீட்டில் இறந்தவர் கிடத்தப்பட்ட இடத்தில் விளக்கேற்றி வைத்து திருமுறைகள் பாடிப் பிரார்த்தனை செய்த பிறகே, உணவருந்துதல் வேண்டும்.

இறப்பு தீட்டு

  • இறப்பு நடந்த வீட்டுக்காரர்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை தீட்டு காக்க வேண்டும். அவர்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது.
  • சுப காரியங்களில் கலந்து கொள்ளக் கூடாது.
  • தீட்டு ஆண்களுக்கே, திருமணமாகி கணவர் வீடு சென்று விட்ட பெண்களை பெற்றோர் விட்டுத் தீட்டு பாதிக்காது.
  • இறந்த நாள் முதல் 16 நாட்களுக்கு அதாவது கருமாதி செய்யும் வரைவில் வீட்டில் நல்ல விளக்கேற்றி வைத்து 24 மணி நேரமும் தொடர்ந்து எரிய விட வேண்டும்.
  • சாதாரண மக்கள் தங்கள் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் 16 நாட்களுக்கு தீட்டு காக்க வேண்டும்.
  • விபத்து அல்லது தற்கொலை போன்ற இறப்பு ஏற்பட்டால், 31 நாட்களுக்குப் பின் கருமாதி செய்து தீட்டுக் காக்க வேண்டும்.
  • தீட்டு காக்கும் போது கொள்ளி வைத்த வரும் வீட்டார் சைவ உணவை உண்ண வேண்டும்.
  • இறப்பு விட்டில் 6 மாதம் முடிவதற்குள் திருமணம் மற்றும் சுப காரியங்களை நடத்த கூடாது.
  • மண மேடை ஏற இருக்கும் ஆணின் தந்தை இறந்தால், மட்டும் ஆறு மாதத்தின் பின்னேயும் தாய் அண்ணன் தாத்தா பாட்டி அக்கா மற்றும் உறவினர்கள் எவரேனும் இருந்தால் மூன்று மாதம் முடிந்த பின்பே திருமணம் நடக்கலாம், என்று சமய சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
  • 16 அல்லது 31 நாட்கள் முடிந்து அடுத்த நாள் வீட்டை கழுவி தூய்மை செய்து சைவக் குருக்களையோ புரோகிதரையோ அழைத்து புண்ணியாக வாசனம் என்னும் சடங்கை நடத்தி தீட்டை கழிக்க வேண்டும்.
  • கோயிலில் புண்ணியாக வாசனம் செய்வித்து புனித நீரை கொண்டு வந்து வீட்டில் தெளித்த பின்னர், சமைப்பதும், பின் படையல் இட்டு, பூசை செய்து, உற்றார் உறவினர்களுடன் உண்பதும் வழக்கம்.
  • இதற்குப் பிறகு தீட்டு இல்லை சுப காரியங்களில் கலந்து கொள்ளலாம், கோயிலுக்கும் போகலாம்.

தொடரும்…

ஜீவசங்கரி

கட்டுரை தொடற்சியை வருகின்ற நாட்களிலும் எதிர்பார்க்கலாம். திருத்தங்கள் பின்னூட்டங்கள் இருப்பின் தெரிவிக்கத் தயங்க வேண்டாம்.
ஏனெனில் மரபு வழி மரணகிரியை முறைகள் நாளுக்கு நாள் எமது பகுதியில் அழிந்து கொண்டு வருவதை அனைவரும் உணர்ந்திருப்பீர்களென நம்புகிறேன். தொடர்புகளுக்கு mattuweb@gmail.com எனும் மின்னஞ்சலை பயன்படுத்தவும்.
அல்லது mattakalappu.com எனும் முகப்புத்தகத்தில் தொடரவும்.
-மட்டுநகர்_ திவா

-மட்டக்களப்பு இணையம்

Share this Article
3 Comments